/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
2026 சட்டசபை தேர்தல் எதிரொலி முக்கியத்துவம் பெறும் தாம்பூல பைகள்
/
2026 சட்டசபை தேர்தல் எதிரொலி முக்கியத்துவம் பெறும் தாம்பூல பைகள்
2026 சட்டசபை தேர்தல் எதிரொலி முக்கியத்துவம் பெறும் தாம்பூல பைகள்
2026 சட்டசபை தேர்தல் எதிரொலி முக்கியத்துவம் பெறும் தாம்பூல பைகள்
ADDED : ஜூலை 09, 2025 08:39 AM

2026 சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி ஆளுங்கட்சி முதல் லெட்டர் பேடு கட்சிகள் வரை காய்களை நகர்த்தி வருகிறது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பொதுச் செயலாளர் மேட்டுப்பாளையத்தில் இருந்து தேர்தல் பரப்புரை பிரசாரத்தை துவக்கியுள்ளார். செப்., மாதத்தில் மக்களை சந்திப்பதாக த.வா.க., தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
வழக்கத்திற்கு மாறாக தேர்தல் துவங்குவதற்கு முன்பாகவே அரசியல் கட்சியினர் பிரசாரத்தை துவக்கியது, வாக்காளர்களிடம் பேசும் பொருளாகியுள்ளது. வழக்கமாக தேர்தல் காலத்தில் ஆளுங்கட்சியினரின் இலவச அறிவிப்பும், அதனை எதிர்த்து எதிர்க்கட்சியினரின் கொள்கைகளும் இடம்பெறும்.
ஆனால், வழக்கத்திற்கு மாறாக 2026 இருக்கும் என்பதால், வாக்காளர்களுக்கு ஜாக்பாட் பரிசு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப, கடலுார் மாவட்டத்தில் அ.தி.மு.க., நிர்வாகிகள் இல்ல விழாக்களில் 'மாஜி' முதல்வர் பழனிசாமி படங்களை அச்சிட்டு தாம்பூல பைகள், பரிசு பொருட்களை வழங்கி வருகின்றனர்.
விரைவில் மாவட்டத்திற்கு வரவுள்ள பழனிச்சாமியை கவரும் வகையிலும், உள்ளூர் நிர்வாகிகளை உசுப்பேற்றும் வகையிலும் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெ., மற்றும் பழனிசாமி படங்கள் அடங்கிய படங்களுடன் சீர்வரிசை பொருட்கள், தாம்பூல பைகளை வழங்கி தொண்டர்களை குஷிப்படுத்தி வருகின்றனர்.

