/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாலுார் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் விழா
/
பாலுார் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் விழா
ADDED : டிச 19, 2024 06:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு; பண்ருட்டி அடுத்த பாலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்க்கூடல் விழா நடந்தது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அண்ணபூரணி தலைமை தாங்கினார். ஓவிய ஆசிரியர் முத்துக்குமரன் முன்னிலை வகித்தார்.
உதவி தலைமை ஆசிரியர் பழனிவேல் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக இலக்கியசோலை தலைவர் துரையன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
ஆசிரியர்கள் மலர்விழி,கல்யாணி,ஜெயஸ்ரீ,கனகராஜ், ஆகியோர் கருத்துரை வழங்கினர்.நிகழ்ச்சியை ஆசிரியை அம்சவள்ளி தொகுத்து வழங்கினார்.

