/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புயலால் பாதித்த பகுதிகளில் தமிழக காங்., தலைவர் உதவி
/
புயலால் பாதித்த பகுதிகளில் தமிழக காங்., தலைவர் உதவி
புயலால் பாதித்த பகுதிகளில் தமிழக காங்., தலைவர் உதவி
புயலால் பாதித்த பகுதிகளில் தமிழக காங்., தலைவர் உதவி
ADDED : டிச 06, 2024 06:27 AM

கடலுார் : கடலுாரில் புயல் பாதித்த பகதிகளை தமிழக காங்., தலைவர் பார்வையிட்டு, நிவாரண உதவி வழங்கினார்.
கடலுாரில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட ரெட்டிச்சாவடி கரிக்கன் நகர், ஆல்பேட்டை, வெள்ளப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகை நேற்று பார்வையிட்டு, அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண பொருட்கள் வழங்கினார்.
ஆல்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில், காங்., மாநில செயலாளர் சந்திரசேகர் ஏற்பாட்டில், 500 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
அப்போது விஷ்ணுபிரசாத் எம்.பி., தொழிலதிபர் மணிரத்னம், மாவட்ட தலைவர் திலகர், துணை தலைவர் பாண்டுரங்கன், மாநகராட்சி கவுன்சிலர் சரஸ்வதி வேலுசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார், மாவட்ட பொருளாளர் ரமேஷ், பொதுச் செயலாளர்கள் காமராஜ், கிேஷார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.