/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேசிய ரோப் ஸ்கிப்பிங் தமிழக அணி ஏழாமிடம்
/
தேசிய ரோப் ஸ்கிப்பிங் தமிழக அணி ஏழாமிடம்
ADDED : டிச 04, 2025 05:20 AM

விருத்தாசலம்: தெலுங்கானாவில் நடந்த தேசிய ரோப் ஸ்கிப்பிங் போட்டியில், தமிழக அணி வீரர்கள் ஏழாமிடம் பிடித்தனர்.
தெலுங்கானா மாநிலம், சிக்கந்தராபாத் நகரில், 26வது தேசிய ரோப் ஸ்கிப்பிங் போட்டி சமீபத்தில் நடந்தது.
ரோப் ஸ்கிப்பிங் கூட்டமைப்பு இந்தியா சார்பில் நடந்த போட்டியில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
இதில், தமிழக அணி சார்பில் தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் விருத்தாசலம் மாணவர்கள் சுஜாதா, 9, ஹரிஹரன், 13, குமரன், 13, கனிஷ், 13, கஜேஷ், 12, சென்னை மாணவர்கள் நிஹாரிக்கா, 7, அதிதி, 9, நிதிலன், 10, ராகவ், 13, ஆகியோர் பங்கேற்றனர்.
பல்வேறு சுற்றுகளில் விளையாடிய தமிழக வீரர்கள், ஏழாமிடம் பிடித்தனர். போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு ரோப் ஸ்கிப்பிங் கூட்டமைப்பு இந்தியா பொதுச் செயலாளர் நிர்தேஷ் ஷர்மா சான்றிதழ்களை வழங்கி, பாராட்டினார். தமிழ்நாடு ரோப் ஸ்கிப்பிங் விளையாட்டு சங்கத் தலைவர் துரைராஜ், பொதுச் செயலாளர் கமலேஸ்வரன் உடனிருந்தனர்.

