/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தமிழ்நாடு வி.ஏ.ஓ., சங்க உயர்மட்ட குழு கூட்டம்
/
தமிழ்நாடு வி.ஏ.ஓ., சங்க உயர்மட்ட குழு கூட்டம்
ADDED : அக் 21, 2024 06:41 AM

நெய்வேலி: நெய்வேலியில் தமிழ்நாடு வி.ஏ.ஓ., சங்க மாநில உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது.
நெய்வேலி ஆர்ச் கேட் எதிரே திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கடலூர் மாவட்ட தலைவர் ஜான் போஸ்கோ முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் செந்தில் முருகன் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் சுரேஷ் தீர்மான விளக்க உரை ஆற்றினார்.
கூட்டத்தில் மாநில சங்கத் தேர்தல் ஆயத்த பணிகள் குறித்தும், மாநில பொதுக்குழு மற்றும் மாநில மாநாடு சம்பந்தமாகவும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
சங்க மாநில பொருளாளர் முத்துச்செல்வன், துணைத் தலைவர் நல்லா கவுண்டன், மாநில செயலாளர்கள் விஸ்வநாதன், அரங்க வீரபாண்டியன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொருளாளர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் துரைராஜ் நன்றி கூறினார்.