ADDED : ஏப் 16, 2026 04:53 AM

அ நிறம் | அளவு
கடலுார்: தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் கடலுார், மஞ்சக்குப்பம் கிளை சார்பில் தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி நடந்தது.
சங்கத்தின் மாநில செயலாளர் திருமலை தலைமை தாங்கி, சங்க உறுப்பினர்களுக்கு தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கம் வழங்கினார்.
பொருளாளர் நரசிம்மன் வரவேற்றார். தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கத்தின் பலன்கள் குறித்து ஸ்ரீரகு விளக்க உரையாற்றினார். உறுப்பினர்கள் கோதண்டராமன், சாரங்கபாணி வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சியி்ல், மோகன கண்ணன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர் .
துணை செயலாளர் ஸ்ரீகாந்த் நன்றி கூறினார்.
