/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெல்லும் தமிழ் பெண்கள் கியூ.ஆர்., கோடு மூலம் பிரசாரம்
/
வெல்லும் தமிழ் பெண்கள் கியூ.ஆர்., கோடு மூலம் பிரசாரம்
வெல்லும் தமிழ் பெண்கள் கியூ.ஆர்., கோடு மூலம் பிரசாரம்
வெல்லும் தமிழ் பெண்கள் கியூ.ஆர்., கோடு மூலம் பிரசாரம்
ADDED : பிப் 25, 2026 05:17 AM
தி . மு.க., ஆட்சி அமைந்த பிறகு பெண்களுக்காக மகளிர் உரிமை திட்டம், மகளிர் விடியல் பயணம், தோழிகள் விடுதிகள், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் வெல்லும் தமிழ்ப்பெண்கள் என்ற பெயரில் தி.மு.க., மகளிரணியினர் வீடு வீடாக சென்று, அரசின் சாதனை திட்டங்களை பெண்களிடம் எடுத்துக் கூறி பிரசாரம் செய்ய வேண்டுமென, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படி, தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக வெல்லும் தமிழ்ப் பெண்கள் பிரசாரம் கடந்த 23ம் தேதி துவங்கியது. கடலுார் மாவட்டத்தில் ஓட்டுச்சாவடி மையங்கள் வாரியாக வீடு வீடாக செல்லும் தி.மு.க., மகளிரணியினர் பிரசாரம் செய்கின்றனர்.
குறிப்பாக, தி.மு.க., மகளிரணியினர் தாங்கள் கொண்டு செல்லும் டைரியில் உள்ள 'கியூ ஆர்' கோடை, பெண்களின் மொபைல் போனில் ஸ்கேன் செய்கின்றனர். அதனை தொடர்ந்து, பெண்களுக்கு தமிழக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசும் வீடியோ இடம் பெற்றுள்ளது.
இது தி.மு.க., வினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

