/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கெமிக்கல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி தீப்பிடித்ததால் பரபரப்பு
/
கெமிக்கல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி தீப்பிடித்ததால் பரபரப்பு
கெமிக்கல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி தீப்பிடித்ததால் பரபரப்பு
கெமிக்கல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி தீப்பிடித்ததால் பரபரப்பு
ADDED : பிப் 17, 2025 01:49 AM

சேத்தியாத்தோப்பு,: சேத்தியாத்தோப்பு அருகே சாலைபோட பயன்படுத்தப்படும் கெமிக்கல் ஏற்றி சென்ற லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விக்கிரவாண்டி -தஞ்சாவூர் பைபாஸ் சாலை பணி நடந்து வருகிறது. கடலுார் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பின்னலுாரில் துவங்கி சோழபுரம் வரை சாலை போடும் பணியை, பட்டேல் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் செய்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு, சாலையில் தார் கலவை, போடும் முன்பாக தெளிக்கப்படும் பிட் எமல்ஷன் என்ற கெமிக்கலை மீன்சுருட்டி தார்பிளான்டில் இருந்து டேங்கர் லாரியை ஏற்றிக் கொண்டு வந்தனர். 5 ஆயிரம் லிட்டர் கெமிக்கலு ஏற்றி வரப்பட்டது.
சேத்தியாத்தோப்பு அருகே பின்னலுார் பைபாஸ் சாலையில் நள்ளிரவு 2:00 மணியளவில் லாரி வந்தபோது, அதிக உஷ்ணம் காரணமாக லாரியின் பின்புறம் திடீரென தீப்பிடித்து எரிய துவங்கியது. டிரைவர் சங்கர், லாரியை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு தப்பியோடினார்.
தகவலறிந்த சேத்தியாத்தோப்பு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீர் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.
இதில் லாரி முழுவது எரிந்து முற்றிலும் சேதமானது. விபத்து குறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.

