/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தாரா பவுண்டேஷன் குழந்தைகளுக்கு பரிசு
/
தாரா பவுண்டேஷன் குழந்தைகளுக்கு பரிசு
ADDED : ஏப் 15, 2025 06:49 AM

கடலுார்; தமிழ்ப்புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, கடலுார் அன்னை சத்தியா குழந்தைகள் நல பெண்கள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு தாரா பவுண்டேஷன் சார்பில் காலணி பரிசாக வழங்கப்பட்டது.
தாரா பவுண்டேஷன் நிறுவனரும், பா.ஜ., ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் வினோத் ராகவேந்திரன், கடலுார் அன்னை சத்தியா குழந்தைகள் நல பெண்கள் காப்பத்தில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு, காலணிகள் வழங்கினார்.
அன்னை சத்தியா குழந்தைகள் நலக்காப்பக கண்காணிப்பாளர், பா.ஜ., மாநகர துணைத்தலைவர் ஏழுமலை, முன்னாள் பொதுசெயலாளர் பாஸ்கர், டாக்டர் கருணாகரன், வழக்கறிஞர் சந்திரசேகர், முத்துக்குமாரசாமி, வைத்தியநாதன், முருகன் உட்பட பலர் உடனிருந்தனர்.