/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
45 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் 'ஹாட்ரிக்' வெற்றிக்கு 'டார்க்கெட்'
/
45 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் 'ஹாட்ரிக்' வெற்றிக்கு 'டார்க்கெட்'
45 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் 'ஹாட்ரிக்' வெற்றிக்கு 'டார்க்கெட்'
45 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் 'ஹாட்ரிக்' வெற்றிக்கு 'டார்க்கெட்'
ADDED : டிச 24, 2025 05:58 AM
தி ட்டக்குடி சட்டசபை தொகுதிக்கு கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து அரசியல் கட்சி தலைவர்களின் வருகையால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதனால், திட்டக்குடி தொகுதியில் தனது முழு கவனத்தையும் அமைச்சர் கணேசன் செலுத்தியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக, திட்டக்குடி தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் சென்று, நலத்திட்ட உதவிகள் வழங்கல், புதிய திட்டப்பணிகள் துவக்கம், மக்கள் குறைக் கேட்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களை சந்திக்கிறார்.
அதில், கடந்த 4 ஆண்டுகளில் தி.மு.க., நிறைவேற்றிய திட்டங்கள், பெண்களுக்கான திட்டங்களை விரிவாக மக்களிடம் பேசுகிறார். அவரிடம் வழங்கும் மனுக்கள், கோரிக்கைகள் மீது அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பது தொகுதி மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திட்டக்குடி தொகுதி தி.மு.க.,வினர் கூறுகையில்; திட்டக்குடி தொகுதிக்கு மற்ற கட்சி தலைவர்களின் வருகையும், பிரசாரமும் அமைச்சரை பாதிப்பதில்லை.
கடந்த 2016, 2021ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றது போல், வரும் 2026ல் நடக்கும் தேர்தலிலும், 45 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தொடர்ந்து 3வது முறையாக திட்டக்குடி தொகுதியில் 'ஹாட்ரிக் வெற்றி பெற டார்க்கெட்' வைத்து செயல்படுகிறார்.
இதற்காக, மக்களை சந்தித்து குறைகளை நிவர்த்தி செய்வது, உட்கட்சி பிரச்னைகள் பெரிதாக உருவாகாமல் அனைவரையும் அரவணைத்து செல்கிறார் என கூறுகின்றனர். அமைச்சரின் 45 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாச 'ஹாட்ரிக்' வெற்றி 'டார்க்கெட்' தான் அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

