ADDED : பிப் 18, 2026 04:13 AM

கடலுார்: கடலுார் டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி னர்.
சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் எதிரில், பணி நிரந்தரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் கடந்த, 16 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று (18ம் தேதி) தமிழகம் முழுவதும் பணிகளை புறக்கணித்து சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதனையொட்டி கடலுார் சிப்காட்டில் உள்ள உள்ள மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு சங்கங்களின் போராட்ட கூட்டுக்குழு சார்பில் நேற்று போராட்ட ஆயத்த கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் நலச்சங்க மாநில செயலாளர் உதயசங்கர், மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு, மாவட்ட பொருளாளர் சிவசண்முகம், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் அல்லிமுத்து, மாவட்ட செயலாளர் பாலமுருகன், மாவட்ட செயல் தலைவர் கோபால்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
