ADDED : ஜன 17, 2025 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே அரசு அனுமதியின்றி, டாஸ்மாக் மதுவை கூடுதல் விலைக்கு விற்றவரை போலீசார் கைதுசெய்தனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் அரசு அனுமதியின்றி டாஸ்மாக் மதுவை கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அங்கு, டாஸ்மாக் மதுவை கூடுதல் விலைக்கு விற்றுக்கொண்டிருந்த நெல்லிக்குப்பம் அப்துல் கலாம் தெருவை சேர்ந்த முகமது சமீரை, 41; போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து, 45 குவாட்டர் மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து, பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.