/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டாஸ்மாக் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு
/
டாஸ்மாக் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு
ADDED : அக் 01, 2024 06:44 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விருத்தாசலம் அடுத்த கோமங்கலம் கிராம எல்லையில், அரசு டாஸ்மாக் (எண். 2650) கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல கடை விற்பனையாளர் பூட்டிச் சென்றார். நேற்று காலை 6:00 மணியளவில், அவ்வழியே வயலுக்கு சென்றவர்கள் பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.
தகவலறிந்த விருத்தாசலம் டி.எஸ்.பி., கிரியா சக்தி, இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சென்று விசாரித்தனர். அதில், பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 140 ரூபாய் மதிப்பிலான 28 குவார்ட்டர் பாட்டில்களை திருடிச் சென்றது தெரிந்தது.
இது தொடர்பாக விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பூட்டியிருந்த டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்களை திருடிச் சென்ற சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.