டாஸ்மாக் குடோன் சுமை பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் குடோன் சுமை பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
UPDATED : அக் 13, 2026 06:53 PM
ADDED : அக் 13, 2026 06:48 PM
கடலுார்: கடலுார், சிப்காட் டாஸ்மாக் குடோன் சுமைப் பணி தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குடிகாடு டாஸ்மாக் குடோன் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சுப்புராயன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் கருப்பையன், மாவட்ட செயலாளர் பழனிவேல், சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் உத்ராபதி, பொருளாளர் சரவணன், முத்து, தலைவர் கருணாநிதி, ஸ்டாலின், . கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். குடோன் சுமை பணி தொழிலாளர்களுக்கு மதுபான பாட்டில்கள் ஸ்கேன் செய்யும் கூலியை இரண்டு ஆண்டுகளாக வழங்காமல் உள்ளதை வழங்க வேண்டும். மதுபான பெட்டி ஏற்றுக் கூலி 5 ரூபாய் வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ.,–பி.எப்., தொகை பிடித்தம் செய்வதை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
