sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நெய்வேலி சக்ராலயா மோட்டார்சில் டாடா பேட்டரி வாகனம் விற்பனை

/

நெய்வேலி சக்ராலயா மோட்டார்சில் டாடா பேட்டரி வாகனம் விற்பனை

நெய்வேலி சக்ராலயா மோட்டார்சில் டாடா பேட்டரி வாகனம் விற்பனை

நெய்வேலி சக்ராலயா மோட்டார்சில் டாடா பேட்டரி வாகனம் விற்பனை


ADDED : ஜன 12, 2024 04:09 AM

Google News

ADDED : ஜன 12, 2024 04:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: நெய்வேலி சக்ராலயா மோட்டார்சில் டாடா பேட்டரி வாகனம் விற்பனை துவக்க விழா நடந்தது.

டாடா மோட்டார்சின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரான நெய்வேலி கிளை சக்ராலயா மோட்டார்சில் டாடா டியாகோ-இவி பேட்டரி வாகனம் விற்பனை துவக்க விழா நடந்தது. பொது மேலாளர் ரவிச்சந்திரன் குத்துவிளக்கேற்றி விற்பனையை துவக்கி வைத்தார்.

முதல் வாகனத்தை குறிஞ்சிப்பாடி தொழிலதிபர் விஜயலட்சுமி கோபி பெற்றுக் கொண்டார். டாடா நெக்ஸான்-இவி வாகனத்தை நெய்வேலி டிரான்ஸ்போர்ட் ஒப்பந்ததாரர் முத்து பெற்றுக் கொண்டார்.

இதுகுறித்து சக்ராலயா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர்கள் துரைராஜ், கோமதி துரைராஜ் கூறுகையில், 'பேட்டரி வாகன விற்பனையில் இந்தியாவில் முதல் இடத்தில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா டியாகோ-இவி, டாடா டிகோர்- இவி, டாடா நெக்ஸான்-இவி மாடல்களை தயாரித்து விற்பனை செய்கிறது.

தரமான லித்தியம் அயன் பாஸ்பேட் பொருந்திய பேட்டரி உள்ளது. இது ஐபி 67 மதிப்பீட்டை பெற்றுள்ளதால் தண்ணீர் மற்றும் மாசு உள்ளே செல்லாதவாறு தயாரிக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது.

இதன் விலை 9 லட்சம் ரூபாய் முதல் உள்ளது. பயண செலவு 90 சதவீதம் வரை சேமிக்கலாம்' என்றனர்.






      Dinamalar
      Follow us