/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புவனகிரி பேரூராட்சியில் வரி வசூல் தீவிரம்
/
புவனகிரி பேரூராட்சியில் வரி வசூல் தீவிரம்
ADDED : ஜன 04, 2024 03:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி பேரூராட்சியில் தீவிர வரி வசூல் முகாம் நடந்து வருகிறது.
புவனகிரி பேரூராட்சியில் நிலுவையில் உள்ள வரிகள் மற்றும் நடப்பாண்டிற்கான சொத்து மற்றும் குடிநீர் உள்ளிட்ட வரிகளை விரைந்து வசூலிக்க, பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குனர் வெங்கடேசன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் பேரூராட்சி சேர்மன் கந்தன், செயல் அலுவலர் செல்லப்பிள்ளை மேற்பார்வையில் பேரூராட்சி ஊழியர்கள், வார்டு கவுன்சிலர்கள் ஒத்துழைப்புடன் குழுவாக பிரிந்து வரி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று புவனகிரி பங்களா பகுதி கடைகளில் இளநிலை உதவியாளர் முருகன், வரித்தண்டலர் தவமணி மற்றும் ஊழியர்கள் வசூல் பணியில் ஈடுபட்டனர்.