ADDED : ஏப் 04, 2026 09:26 PM

கடலுார்: கடலுார் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் த.வா.க., வேட்பாளர் லெனின் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கடலுார் சட்டசபை தொகுதியில் த.வா.க., சார்பில் கடலுார் வழக்கறிஞர் சங்க செயலாளர் லெனின் போட்டியிடுகிறார். இவர், கட்சி தொண்டர்களுடன் நேற்று காலை தலைமை தபால் நிலையம் அருகில் இருந்து ஊர்வலமாக மனு தாக்கல் செய்ய ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு வந்தார்.
பின், தேர்தல் நடத்தும் அதிகாரி சுந்தரராஜனிடம் மனு தாக்கல் செய்தார். குறிஞ்சிப்பாடி தொகுதி த.வா.க., வேட்பாளர் கண்ணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வாணிஸ்ரீ, ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், சுரேன்குமார், மாநில மகளிரணி செயலாளர் அமராவதி, மாநகர செயலாளர்கள் தண்டபாணி, நவீன், மாநகராட்சி கவுன்சிலர் அருள்பாபு, நகர தலைவர்கள் ரத்தினம், ஆதிகேசவன், வெங்கட், விக்னேஷ், சபா, சதீஷ், ராஜேஷ், காளிமுத்து, சுரேஷ், பாண்டியன், சிலம்பு, பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
