/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் டீ விலை 14 ரூபாயாக உயர்வு
/
கடலுாரில் டீ விலை 14 ரூபாயாக உயர்வு
ADDED : நவ 23, 2025 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் 'டீ' விலை அதிகபட்சமாக 14 ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடலுார் மாநகரில் 'டீ' விலை ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரை, ஒரு டீயின் விலை 10 ரூபாயாக இருந்தது. இந்நிலையில் அண்மையில் 'டீ' விலை 12 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
மஞ்சக்குப்பம், புதுப்பாளையம், வண்ணாரப்பாளையம் பகுதி முழுவதும் 10 ரூபாய்க்கும், திருப்பாதிரிப்புலியூரில் ஒரு சில இடங்களை தவிர மற்ற இடங்களில் 12 ரூபாயாகவும், இன்னும் சில கடைகளில் 14 ரூபாயாகவும் டீ விற்பனை செய்யப்படுகிறது. இதனால், டீ பிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

