/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்
/
ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 13, 2024 03:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், புவனகிரி வட்டார கல்வி அலுவலக வாயிலில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. புவனகிரி வட்டார கல்வி அலுவலகம் முன், நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ஒன்றிய செயலாளர் தவச்செல்வன் தலைமை தாங்கினார்.
மாவட்ட பொருளாளர் சங்கரநாராயனன், ஆசிரியர் முன்னேற்ற சங்க நிறுவனர் துரைமணிராஜன் முன்னிலை வகித்தனர்.
தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் ராமசஞ்சீவி, நிர்வாகிகள் அருணாசலம், சுந்தரமூர்த்தி, வெற்றிச்செல்வி, பாவாடை, துரைசேகர், அரவிந்தன் உட்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் நன்றி கூறினார்.