ADDED : மார் 17, 2026 04:53 AM

அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரில், ஓய்வுப்பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
வட்டார கல்வி அலுவலர் உமாராணி தலைமை தா ங்கினார். வட்டார கல்வி அலுவலர் அறிவழகன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் கீதா வரவேற்றார். வள மை ய ஆசிரிய பயிற்றுநர்கள் மணிகண்ணன், செங்குட்டுவன், வடிவேல் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
விழாவில், ஓய்வுப்பெற்ற ஆசிரியர்கள் வரலட்சுமி, ராஜேஸ்வரி, ருக்மணி, டெல்பின், சாந்தி, நிர்மலா, மங்கையர்கரசி, கீதாராணி, கஸ்துாரி, சமரசம், குமாரகிருஷ்ணன், தாஸ், சரஸ்வதி, இந்திரா காந்தி ஆகியோருக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் கலைச்செல்வி நன்றி கூறினார்.
