/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீனஸ் பள்ளியில் ஆசிரியர் தின விழா
/
வீனஸ் பள்ளியில் ஆசிரியர் தின விழா
ADDED : செப் 19, 2024 11:37 PM

சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் குழுமப் பள்ளிகளில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளியில் நடந்த விழாவிற்கு, பள்ளிகளின் குழும தாளாளர் குமார் தலைமை தாங்கினார். துணை தாளாளர் ரூபியால்ராணி முன்னிலை வகித்தார். ஆங்கில ஆசிரியர் முத்துக்குமரன் வரவேற்றார். பள்ளி முதல்வர் நரேந்திரன், வீனஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி முதல்வர் லியோபேஸ்கிராவ் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து, ஆசிரியர்கள் பங்கேற்ற நாடகம், நடனம், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டிகளை பள்ளியின் நிர்வாக அலுவலர் ரூபிகிரேஸ் பொனிகலா நடத்தினார்.
நிகழ்ச்சியை ஆசிரியைகள் சுபஸ்ரீ, ஹரிபிரியா தொகுத்து வழங்கினர். தாளாளர் வீனஸ் குமார், ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.மழலையர் பள்ளி ஆசிரியை சவுமிய நன்றி கூறினார்.