ADDED : செப் 07, 2025 07:34 AM

அ நிறம் | அளவு
கடலுார் : நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு ஸ்ரீ வள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது.
பள்ளியின் தலைவர் சீனுவாசன் தலைமை தாங்கினார்.
தாளாளர் இந்துமதி சீனுவாசன், உதவி தலைமை ஆசிரியை மீனா ராஜேந்திரன், கல்வி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பாபு மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
நாடகங்கள், பாடல்கள் மூலம் மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தினர். அனைத்து ஆசிரியர்களுக்கும், மாணவர்கள் பரிசு வழங்கினர்.
