ADDED : செப் 06, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் லட்சுமி சோரடியா பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது.
பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா தலைமை தாங்கி, ஆசிரியர்களை பாராட்டி பேசினார். தலைமை ஆசிரியர் சந்தோஷ்மல் சோரடியா, உதவி தலைமை ஆசிரியர் பத்தாகன், ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி சோரடியா முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர் புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனை டாக்டர் கவிதா, ஆசிரியர் தினம் குறித்து பேசினார்.
தொடர்ந்து, இப்பள்ளியின் மற்றொரு கல்வி நிலையமான லட்சுமி சோரடியா இண்டர்நேஷனல் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.
மழலையர்கள் ராதை, கிருஷ்ணர் வேடம் அணிந்து பார்வையாளர்களை கவர்ந்தனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சித்ரா செய்திருந்தார்.
