/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வி.சி.,பேனர் கிழிப்பு கடலுாரில் பரபரப்பு
/
வி.சி.,பேனர் கிழிப்பு கடலுாரில் பரபரப்பு
ADDED : ஆக 17, 2025 03:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் செம்மண்டலம் பகுதியில் வி.சி., பேனரை மர்ம நபர்கள் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார், செம்மண்டலம் பகுதியில், வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவன் பிறந்த நாளையொட்டி, வைக்கப்பட்டிருந்த பேனரை மர்ம நபர்கள் நேற்று இரவு கிழித்துள்ளனர். இதனையறிந்த நிர்வாகிகள் தாமரைச்செல்வன், செந்தில் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் திரண்டதால் பரபரப்பு நிலவியது.
தகவலறிந்த கடலுார் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதனையேற்று வி.சி., நிர்வாகிகள் கலைந்து சென்றனர்.