நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார்: குறிஞ்சிப்பாடி அருகே வயிற்று வலி காரணமாக இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குறிஞ்சிப்பாடி அருகே பெத்தநாயக்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி மகள் கொளஞ்சியம்மாள், 27; இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக வயிற்று வலி இருந்துள்ளது.
இதன் காரணமாக, நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கொளஞ்சியம்மாள் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவரது தாய் ஜெயம் கொடுத்த புகாரில், குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

