ADDED : நவ 10, 2024 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரத்தில் மன உளைச்சலில் வாலிபர் துாக்கு போட்டு இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிதம்பரம் பழைய புவனகிரி ரோட்டைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் பிரபாகரன், 36; இவருக்கு சர்க்கரை நோய் இருந்ததால் சில மாதங்களாக நோய் தாக்கம் அதிகரித்து வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டில் இருந்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த பிரபாகரன் நேற்று முன்தினம், வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிதம்பரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.