ADDED : மார் 27, 2025 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: தீராத வயிற்றுவலி காரணமாக வாலிபர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திட்டக்குடி அடுத்த தி.இளமங்கலம் காலனியை சேர்ந்தவர் பிரபா மகன் விஷ்ணுபிரியன், 22. இவருக்கு தீராத வயிற்றுவலி இருந்து வந்தது.
நேற்று முன்தினம் இரவு வலி அதிகமானதால் மனமுடைந்த விஷ்ணுபிரியன் நள்ளிரவு 1:00 மணியளவில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த திட்டக்குடி போலீசார் விஷ்ணுபிரியனை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.
புகாரின்பேரில், திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.