/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோவில் திருவிழா பேச்சுவார்த்தை தோல்வி
/
கோவில் திருவிழா பேச்சுவார்த்தை தோல்வி
ADDED : ஏப் 04, 2025 05:05 AM

விருத்தாசலம்: விஜயமாநகரம் கோவில் திருவிழா தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் கிராமத்தில், என்.எல்.சி., மாற்றுக் குடியிருப்பு மக்கள் வசிக்கின்றனர்.
இங்குள்ள பாசியம்மன் கோவிலுக்கு திருவிழா நடத்துவதில் இருதரப்பினர் இடையே கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், பாசியம்மனுக்கு தீமிதி திருவிழா நடத்துவது குறித்து தாசில்தார் உதயகுமார் தலைமையில் நேற்று அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.
மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் பாண்டிசெல்வி, சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் உட்பட இருதரப்பு பிரமுகர்கள் பங்கேற்றனர். இருதரப்பிலும் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் கூடியிருந்ததால் பரபரப்பு நிலவியது. இரு தரப்பினரும் கோவில் நிர்வாகம் பராமரிப்பு மற்றும் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகள் குறித்து விவாதித்துக் கொண்டதால் சுமூக தீர்வு ஏற்படவில்லை.
ஒரு தரப்பினர் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர். அதிகாரிகளும் செய்வதறியாது வெளியேறினர்.

