கோவில் பூட்டை உடைத்து கொள்ளை நெய்வேலியில் துணிகரம்
கோவில் பூட்டை உடைத்து கொள்ளை நெய்வேலியில் துணிகரம்
ADDED : செப் 02, 2026 06:44 PM
அ நிறம் | அளவு
நெய்வேலி, செப். 3-
நெய்வேலியில் கோவில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நெய்வேலி டவுன்ஷிப், மெயின் பஜார் அருகே, செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது. சமீபத்தில் இக்கோவிலுக்கு கும்பாபிேஷகம் நடந்தது.
இந்நிலையில் நேற்று காலை, அர்ச்சகர் வழக்கம் போல் கோவிலை திறக்க சென்றபோது, கோவிலின் முன்கதவு பூட்டு உடைந்திருந்தது. அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்றபோது உண்டியல் உடைந்து கிடந்தது. அதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.
தகவலறிந்த டவுன்ஷிப் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் காணிக்கை பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
