/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் கோவில் பூசாரிகள் கோரிக்கை
/
மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் கோவில் பூசாரிகள் கோரிக்கை
மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் கோவில் பூசாரிகள் கோரிக்கை
மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் கோவில் பூசாரிகள் கோரிக்கை
ADDED : டிச 25, 2024 04:13 AM

விருத்தாசலம், : விருத்தாசலத்தில் கிராம கோவில் பூசாரிகள் பேரவை மற்றும் அருள்வாக்கு அருள்வோர் பேரவை மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.
அமைப்பாளர் சீனிவாசன் வரவேற்றார். கிராம கோவில் பூசாரிகள் பேரவை மாநில பொதுச் செயலாளர் சோமசுந்தரம், தீர்மானங்களை வாசித்தார். திருவண்ணாமலை துறையூர் திருமுதுகுன்றத்து வீரசைவ ஆதீனம் 24ம் பட்டம் குருமகா சன்னிதானம் ரத்தின வேலாயுத சிவப்பிரகாச பரமாச்சாரியார் சுவாமிகள் வாழ்த்துரை வழங்கினார்.
இதில், கிராம கோவில் பூசாரிகள், அருள்வாக்கு அருள்வோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கிராம பூசாரிகள் அனைவருக்கும் எவ்வித நிபந்தனை இன்றி மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். 60 வயது நிறைந்த அனைத்து பூசாரிகளுக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.