ADDED : ஏப் 30, 2025 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்; சிதம்பரம் பச்சையப்பன் பள்ளி மைதானத்தில் சாரதாராம் ஸ்போர்ட்ஸ் அகாடமி துவக்கம் மற்றும் டென்னிஸ் பயிற்சி துவக்க விழா நடந்தது.
கணபதி தலைமை தாங்கினார். டாக்டர்கள் முத்துகுமார், வாசுதேவன் மற்றும் சேதுராமன் வாழ்த்திப் பேசினர்.
விழாவில், பள்ளி தலைமை ஆசிரியர் புருஷோத்தமன், உடற்கல்வி ஆசிரியர் வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை முன்னாள் தலைமை ஆசிரியர் தர்பாரண்யன், செந்தில்வேலன், பொன்னுராஜ் செய்திருந்தனர்.
6 முதல் 16 வயது வரையிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டென்னிஸ் பயிற்சி, உடற்பயிற்சி, குழு போட்டிகள், ஆரோக்கிய உணவு மற்றும் வழிமுறைகள் குறித்து 1 மாதம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

