/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அம்பேத்கர் சிலையில் கல்வெட்டு விவகாரம் காங்.,- வி.சி., இடையே பரபரப்பு
/
அம்பேத்கர் சிலையில் கல்வெட்டு விவகாரம் காங்.,- வி.சி., இடையே பரபரப்பு
அம்பேத்கர் சிலையில் கல்வெட்டு விவகாரம் காங்.,- வி.சி., இடையே பரபரப்பு
அம்பேத்கர் சிலையில் கல்வெட்டு விவகாரம் காங்.,- வி.சி., இடையே பரபரப்பு
ADDED : ஜூலை 12, 2025 04:07 AM

சிதம்பரம்: சிதம்பரத்தில் புதிதாக நிறுவப்படும் அம்பேத்கர் சிலையில் காங்., கல்வெட்டு வைக்க வேண்டுமென, அக்கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம், பேட்டை பகுதியில் கடந்த மாதம், கோர்ட் உத்தரவின்படி, நெடுஞ்சாலை துறையினர் சாலையோர கொடிகம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அருகில் இருந்த அம்பேத்கர் சிலை சேதமானது. இதனை கண்டித்து வி.சி.,-பா.ஜ., வினர் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அந்த இடத்தில் புதிய அம்பேத்கர் சிலை நிறுவி, முதல்வர் ஸ்டாலின் மூலமாக திறந்து வைக்க வி.சி., கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலை, காங்., கட்சியின் குமராட்சி முன்னாள் ஒன்றிய சேர்மன் செந்தில்குமார், பேட்டை பகுதியில் சேதமான அம்பேத்கர் சிலை, முன்னாள் எம்.பி., வள்ளல்பெருமாள் தலைமையில், அமைக்கப்பட்டது எனவும், அங்கு இருந்த கல்வெட்டை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும் எனக் கோரி சப் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க முடிவு செய்தார்.
இந்நிலையில், காங்., மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் கஞ்சித்தொட்டியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில செயலாளர் சித்தார்த்தன், முன்னாள் சேர்மன் செந்தில்குமார், நகர தலைவர் மக்கின், மாவட்ட துணை தலைவர் ஜெமினிராதா, ராஜா சம்பத்குமார், பாலச்சந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வி.சி., கட்சியினர் நிறுவும் அம்பேக்தர் சிலையின் கீழ் காங்., கட்சியின் பழைய கல்வெட்டை நிறுவ வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். அப்போது, அங்கு வந்த வி.சி., மாவட்ட செயலாளர் தமிழ்ஒளி, தொகுதி பொறுப்பாளர் செல்லப்பன் உள்ளிட்டோர், அம்பேத்கர் சிலை அருகில் தான் காங்., கல்வெட்டு அமைக்கப்படும் எனக் கூறி சென்றனர்.
வி.சி., கட்சியினர் அம்பேத்கர் சிலை அமைக்கும் பணியில் ஈடுபடுவதும், அந்த சிலையின் கீழ் காங்., கல்வெட்டு வைக்க அக்கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.