ADDED : மே 15, 2026 02:57 AM
அ நிறம் | அளவு
சிதம்பரம்: சிதம்பரம் பகுதியில் நேற்று திடீரென எழுந்த பயங்கர வெடி சத்தத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மதியம் திடீரென அதிரும் அளவிற்கு பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். வீடுகளில் ஜன்னல்கள் ஆட்டம் கண்டன. இந்த சத்தம் எங்கிருந்து வந்தது என யூகிக்க முடியவில்லை.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வரையிலும் சிதம்பரம் அடுத்துள்ள புதுச்சத்திரம் வரையிலும் சத்தம் கேட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது போன்ற சத்தம், ஏற்கனவே, இரு முறை கேட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுபோன்ற சப்தம் போர் விமானங்கள் மூலம் ஏற்பட்டிருக்கலாம் என, கூறப்படுகிறது.
