/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அபிராமி அம்பாள் கோவிலில் தை அமாவாசை விழா
/
அபிராமி அம்பாள் கோவிலில் தை அமாவாசை விழா
ADDED : ஜன 29, 2025 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்,: பின்னத்துாரில் அமைந்துள்ள அபிராமி அம்பாள் கோவிலில் தை அமாவாசை விழா நடந்தது.
சிதம்பரம் அடுத்துள்ள பின்னத்துாரில் ஸ்ரீ அபிராமி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, தை அமாவாசை திருவிழா நடந்தது. அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அலங்காரம் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, கோவிலில் உள்ள அனைத்து பரிவார சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர், அபிராமி அந்தாதியின் 100 பாடல்கள், பாராயணம் செய்து, நூறுமுறை ஆராதனை நடந்தது. நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

