ADDED : பிப் 06, 2025 11:23 PM

அ நிறம் | அளவு
கடலுார்: தை கிருத்திகையொட்டி, கடலுார் பகுதி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
முருகருக்கு உகந்த தை கிருத்திகை தினமான நேற்று, கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில், வண்டிப்பாளையம் சிவசுப்ரமணியர், கூத்தப்பாக்கம் பால தண்டாயுதபாணி உள்ளிட்ட கோவில்களில் காலையில் முருகருக்கு சிறப்பு அபிேஷகம், பூஜைகள் நடந்தன. முருகர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
தொடர்ந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
