/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் தைப்பூச விழா: எம்.எல்.ஏ., பங்கேற்பு
/
கடலுாரில் தைப்பூச விழா: எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : ஜன 26, 2024 12:12 AM

கடலுார் : கடலுாரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் நடந்த தைப்பூச ஜோதி விழாவில், பக்தர்களுக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., அன்னதானம் வழங்கினார்.
கடலுார் பீச் ரோடு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க ஜோதி வழிபாடு நிலையத்தில், தைப்பூச விழா நடந்தது. அதையொட்டி, நேற்று காலை 6:00 முதல் 7:30 மணி வரை அருட்பெருஞ்ஜோதி அகவல் ஓதுதல், 7:00 மணிக்கு தியானம், காலை 8:00, மதியம் 12:00, மாலை 6:00 மணிகளில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
இதில், கலந்து கொண்ட பக்தர்களுக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., அன்னதானம் வழங்கினார்.
அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், சன்மார்க்க சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று, புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள வள்ளலார் ஆட்டோ ஓட்டுநர் நலச் சங்கம் சார்பில் அங்குள்ள வள்ளலார் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

