தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தூங்கிய பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு

தூங்கிய பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு

தூங்கிய பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு


UPDATED : செப் 17, 2026 04:29 PM

ADDED : செப் 17, 2026 04:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 17, 2026 04:29 PM ADDED : செப் 17, 2026 04:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திட்டக்குடி:வீடு புகுந்து துாங்கிய பெண்ணிடம் தாலி செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

திட்டக்குடி அடுத்த நெய்வாசல், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி,35; வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி ரேகா,31; தனது ஏழு மாத பெண் குழந்தை மற்றும் மாமியாருடன் வசித்து வருகிறார்.

இவர், கடந்த 15ம் தேதி இரவு வீட்டின் வராண்டாவில் குழந்தை, மாமியாருடன் துாங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு வீட்டின் கதவை திறந்து உள்ளே நுழைந்த மர்ம நபர், ரேகா கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தாலி செயினை பறிக்க முயன்றார். திடுக்கிட்ட ரேகா கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள், மர்மநபர் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us