UPDATED : ஆக 26, 2026 09:33 PM
ADDED : ஆக 26, 2026 09:32 PM
ஸ்ரீமுஷ்ணம்: கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலியை திருடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணம் அடுத்த சாத்தாவட்டம்கிராமத்தில் உள்ள காத்தாயி அம்மன் கோவிலில் கடந்த 7ம் தேதி, அம்மன் கழுத்தில் இருந்த 2 கிராம் தங்க தாலி திருடு போனது.
இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்கு பதிந்து, கோவிலில் இருந்த சி.சி.டி.வி., பதிவை ஆய்வு செய்தனர். அதில், கோவிலுக்கு சாமி கும்பிட மனைவியுடன் வந்த வாலிபர் ஒருவர், அம்மன் கழுத்தில் இருந்த தாலியை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இந்நியைலில், ஸ்ரீமுஷ்ணம் போலீசார் மதியம் விருத்தாசலம் சாலையில் சந்தை தோப்பு அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர் வடலுார் அடுத்த கருங்குழியை சேர்ந்த தமிழ்ச்செல்வன்,25; என்பதும், சாத்தாவட்டம் கிராமத்தில் உள்ள காத்தாயி அம்மன் கோவில் அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலியைதிருடியது தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார், அவரை கைது செய்தனர். மேலும், அவர் திருடி உருக்கி வைத்திருந்த 2 கிராம் தங்கம் மற்றும் அவரது பைக்கையும் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த திருட்டுக்கு உடந்தையாக இருந்த தமிழ்செல்வனின் மனைவியை தேடிவருகின்றனர்.
