/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தம்பிக்குநல்லான்பட்டினம் ஊராட்சி கிராம பொதுமக்கள் கோரிக்கை
/
தம்பிக்குநல்லான்பட்டினம் ஊராட்சி கிராம பொதுமக்கள் கோரிக்கை
தம்பிக்குநல்லான்பட்டினம் ஊராட்சி கிராம பொதுமக்கள் கோரிக்கை
தம்பிக்குநல்லான்பட்டினம் ஊராட்சி கிராம பொதுமக்கள் கோரிக்கை
ADDED : ஜன 13, 2024 04:04 AM

புவனகிரி அடுத்த தம்பிக்குநல்லான்பட்டினம் கிராமத்தில் 1,300க்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இந்த கிராமம் புவனகிரி பேரூராட்சி, ஆயிபுரம் மற்றும் ஆதிவராக நல்லுார் கிராம ஊராட்சியில் பிரிந்து உள்ளது.
எல்லை பிரச்னையை காரணம் காட்டி அடிப்படை தேவைகளுக்கு தீர்வு காண முடியாத நிலை நீண்ட காலமாக நிலவி வருகிறது.
இப்பகுதியை கிராம ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என, பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இருந்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இப்பகுதியில் குடிநீர், சாலை வசதி, மின்சாரம் மற்றும் ரேஷன் கடை உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு பொதுமக்கள் மூன்று பகுதிகளுக்கும் பிரிந்து செல்ல வேண்டியுள்ளது. இதையடுத்து இப்பகுதியை கிராம ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளனர்.
பா.ஜ., நிர்வாகி வீரவன்னியராஜா கூறியதாவது; பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் அடிப்படை வசதிகளுக்கு அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனை தனி கிராம ஊராட்சியாக அமைக்க வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளோம்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி கடந்த பேரூராட்சி தேர்தலின்போது தேர்தல் புறக்கணிப்பு செய்தனர். அப்போது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
ஆனால் கிடப்பில் போட்டுள்ளனர். இப்பகுதி மக்கள் நலன் கருதி, ஊராட்சியாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
த.வா.க., புவனகிரி ஒன்றிய செயலாளர் சத்யமூர்த்தி, பா.ம.க.. புவனகிரி நகர செயலர் கோபிநாத் ஆகியோர் கூறியதாவது;
தெருவிளக்கு அமைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. ரேஷன் கடை இல்லாமல் பொதுமக்கள் கீழ்புவனகிரி, ஆயிபுரம், ஆதிவரகநல்லுார் செல்லும் அவலம் நீடிக்கிறது.
ஊராட்சி கோரிக்கையை வலியுறுத்தி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை.
எனவே தம்பிக்குநல்லான்பட்டினத்தை கிராம ஊராட்சியாக அறிவிக்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும்' என்றனர்.