/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெஞ்சல் புயல் எதிரொலி வெறிச்சோடியது இ.சி.ஆர்.,
/
பெஞ்சல் புயல் எதிரொலி வெறிச்சோடியது இ.சி.ஆர்.,
ADDED : டிச 01, 2024 07:02 AM

கோட்டக்குப்பம், : பெஞ்சல் புயல் எதிரொலியாக புதுச்சேரி - சென்னை இ.சி.ஆர்., வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடியது.
பெஞ்சல் புயல் நேற்று காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதையொட்டி, கடற்கரை பகுதியில் நேற்று காற்று அதிகமாக வீசியது. பிற்பகலுக்கு மேல் கன மழை கொட்டியது. இதன் காரணமாக பொது மக்கள் வீட்டிற்குள் முடங்கினர்.
சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் அரசு பஸ்கள் முழுதும் நிறுத்தப்பட்டது. புயல் மற்றும் கனமழை காரணமாக நேற்று இசிஆரில்., போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
தந்திராயன்குப்பம், பொம்மையார்பாளையம் பகுதிகளில் கடல் அதிக சீற்றமாக காணப்பட்டது. 6 அடி உயரத்திற்கு மேல் அலை எழும்பின.

