/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வடலுாரில் வள்ளலார் வருவிக்க உற்றநாள்
/
வடலுாரில் வள்ளலார் வருவிக்க உற்றநாள்
ADDED : அக் 05, 2025 03:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார் : வடலுாரில் வள்ளலார், 203ம் ஆண்டு பிறந்த நாள் விழா இன்று நடக்கிறது.
வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது. வள்ளலாரின், 203ம் ஆண்டு வருவிக்க உற்றநாள் (பிறந்த நாள்) விழாவையொட்டி கடந்த, 28ம் தேதி முதல், 30ம் தேதி வரை தருமசாலையில் மகா மந்திரம், பாராயணம் நடந்தது.
தொடர்ந்து, 1ம் தேதி முதல், நேற்று வரை சத்திய ஞான சபையில் திருஅருட்பா முற்றோதல், சன்மார்க்க சொற்பொழிவு, திருஅருட்பா இன்னிசை நிகழ்ச்சி, கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
இன்று (5ம் தேதி) காலை 5:00 மணிக்கு, தருமச்சாலையில் அகவல் பாராயணம், 7:30 மணிக்கு, சன்மார்க்க கொடியேற்றுதல், 9:00 மணிக்கு சத்திய ஞான சபையில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.