/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஊராட்சிக்கான பேட்டரி வாகனம் காட்சிப் பொருளான அவலம்
/
ஊராட்சிக்கான பேட்டரி வாகனம் காட்சிப் பொருளான அவலம்
ஊராட்சிக்கான பேட்டரி வாகனம் காட்சிப் பொருளான அவலம்
ஊராட்சிக்கான பேட்டரி வாகனம் காட்சிப் பொருளான அவலம்
ADDED : ஆக 13, 2025 03:07 AM

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்தில் 51 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஒன்றியத்தில் உள்ள ஆலடி, ரூபநாராயணநல்லுார், புதுக்கூரைப்பேட்டை, சத்தியவாடி, மு.பட்டி, சின்னவடவாடி, உள்ளிட்ட 16 ஊராட்சிகளில், துாய்மை பணிகளை மேற்கொள்ள, துாய்மை பாரத இயக்க திட்டத்தின் மூலம் பேட்டரி வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தற்போது, ஒன்றிய அலுலக வாளாகத்தில் 16 பேட்டரி வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த பேட்டரி வாகனங்கள் அனைத்தும் திறந்த வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், மழை, வெயிலில் நின்று வீணாகி வருகிறது. மேலும், அந்த பகுதியில் ஒன்றிய அலுவலக கட்டுமான பணி நடப்பதால், அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களின் ஈர துணிகளை வாகனங்களின் மீது போட்டு உலர வைக்கின்றனர்.
எனவே, காட்சி பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேட்டரி வாகனங்களை அந்தந்த கிராம ஊராட்சிகளுக்கு வழங்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.