UPDATED : ஜூன் 14, 2026 03:50 PM
ADDED : ஜூன் 14, 2026 03:41 PM
திட்டக்குடி;திட்டக்குடி அருகே மொபட்டில் சென்ற கொத்தனார் தவறி விழுந்து இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விருத்தாசலம், சாவடிக்குப்பத்தை சேர்ந்தவர் சக்திவடிவேல், 42. கொத்தனார். திருமணமாகவில்லை. இவர், பெண்ணாடம் அடுத்த சின்னகொசப்பள்ளத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தில் கொத்தனார் வேலை முடித்துவிட்டு இரவு 8:00 தனது மொபட்டில் திட்டக்குடி - விருத்தாசலம் சாலையில் சின்னகொசப்பள்ளத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது கோழியூர் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக மொபட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
