/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுமியுடன் நிச்சயம்; வாலிபர் மீது வழக்கு
/
சிறுமியுடன் நிச்சயம்; வாலிபர் மீது வழக்கு
ADDED : நவ 09, 2024 07:30 AM
பண்ருட்டி : பண்ருட்டி அருகே 17 வயது சிறுமிக்கு திருமணம் நிச்சயம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த கொளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணிக்கண்ணு மகன் ரகுராஜன்,33. இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் நேற்று முன்தினம் திருமணம் செய்திட பண்ருட்டியில் ஏற்கனவே நிச்சயத்தார்த்தம் நடந்தது. இத்தகவல் அறிந்த அண்ணாகிராமம் ஒன்றிய மகளிர் ஊர்நல அலுவலர் கோமதி தலைமையில் கடந்த அக்டோபர் 29ம் தேதி திருமணம் நடைபெறாமல் தடுத்து நிறுத்தி, எச்சரித்தனர்.
இதுகுறித்து பண்ருட்டி மகளிர் போலீசில் ஊர் நல அலுவலர் கோமதி, அளித்த புகாரின்பேரில் ரகுராஜன் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.