/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதல்வர் அறிவித்த கஸ்டம்ஸ் சாலை நிதி ஒதுக்கியும் பணி கிடப்பில்
/
முதல்வர் அறிவித்த கஸ்டம்ஸ் சாலை நிதி ஒதுக்கியும் பணி கிடப்பில்
முதல்வர் அறிவித்த கஸ்டம்ஸ் சாலை நிதி ஒதுக்கியும் பணி கிடப்பில்
முதல்வர் அறிவித்த கஸ்டம்ஸ் சாலை நிதி ஒதுக்கியும் பணி கிடப்பில்
ADDED : ஜூன் 27, 2025 12:14 AM
கடலுார்: கடலுார் கலெக்டர் ஆபீசில் இருந்து, கண்டரக்கோட்டை வரை பெண்ணையாற்று படுகையில் சென்று இணையக்கூடிய பழைய கஸ்டம்ஸ் சாலைக்கு முதல்வர் ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் இதுவரை பணிகள் துவங்கவில்லை.
கடலுாரில் இருந்து விழுப்புரம் செல்ல பயண துாரம் 50 கி.மீ., ஆக உள்ளது. இந்த வழித்தடத்தில் போக்குவரத்து மிகுதி, அதிக பஸ் நிறுத்தம் காரணமாக இந்த துாரத்தை கடக்க சராசரியாக 1:30 மணி நேரம் ஆகிறது.
அதனால் பயண நேரத்தை குறைக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் 10 கி.மீட்டர் குறைவாக புதிதாக பழைய கஸ்டம்ஸ் சாலை அமைக்க கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்டது. இதற்காக அந்தந்த ஊராட்சிகளின் சார்பில் இடம் தெரியாமல் இருந்த சாலையை மீண்டும் சர்வே செய்து கண்டுபிடித்து மண் சாலை அமைக்கப்பட்டது.
முதல்கட்டமாக கடலுாரில் இருந்து பட்டாம்பாக்கம் வரை உள்ள ஊராட்சிகள் சாலை போடுவதற்கான செலவை ஏற்றுக்கொண்டன. அதன் பின்னர் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மண் சாலை மீது 16 கோடி ரூபாய் மதிப்பில் தார் சாலை அமைக்கப்பட்டது.
இந்த சாலை சொர்ணாவூர் பாலம் அருகே இணைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலை அமைத்தும் மக்களுக்கு முழுமையாக பயன்படவில்லை. சாலையில் மிக குறைந்த அளவு போக்குவரத்து மட்டுமே செல்கிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக கஸ்டம்ஸ் சாலை மிகவும் சீர்கேடு அடைந்துவிட்டது. இவற்றை முழுமையாக சீரமைக்கவும், 2ம் கட்ட பணியை தொடரவும் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டு 3 மாதங்களை கடந்தும் இன்னும் ஆரம்ப கட்டப்பணியே துவங்கவில்லை. கலெக்டர் மற்றும் அதிகாரிகள் இதற்கு முழு முயற்சி எடுத்தால்தான் 2ம் கட்டப்பணி துவங்க முடியும்.