தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஆளும் கட்சிக்குள் பனிப்போர் கடைகோடி தொகுதியில் லக.. லக

ஆளும் கட்சிக்குள் பனிப்போர் கடைகோடி தொகுதியில் லக.. லக

ஆளும் கட்சிக்குள் பனிப்போர் கடைகோடி தொகுதியில் லக.. லக


UPDATED : நவ 24, 2026 04:44 PM

ADDED : நவ 24, 2026 04:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 04:44 PM ADDED : நவ 24, 2026 04:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மாவட்ட தலைநகரில் வசித்த ஆளும் கட்சியின் தலைமைக்கு முக்கியமான பிரமுகர் ஒருவர், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், கடைகோடி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்த அவர், விட்ட தொகுதியை பிடித்தே ஆக வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு, தலைநகரில் இருந்த தனது ஜாகையை, உள்ளூர் நிர்வாகிகள் ஆதரவுடன் தோல்வியடைந்த தொகுதிக்கே மாற்றி, தொகுதியில் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், அவர் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் தனது மனைவியை நகராட்சி சேர்மனாக்கி அழகு பார்க்க முனைப்பு காட்டி வருகிறார்.

அதேவேளையில், உள்ளூரின் முக்கிய பிரமுகர் ஒருவர் தனக்கு ஆதரவாக உள்ள குடும்பத்தில் உள்ள ஒருவரை நகராட்சி சேர்மனாக்க, தனது ஆதரவாளர்களுடன் தலைமையின் ஆதரவை பெற காய் நகர்த்தி வருகிறார்.

இதனால் கடைகோடி தொகுதியில் ஆளும் கட்சியினருக்குள் பனிப்போர் ஏற்பட்டுள்ளதால், மாற்று கட்சியினர் குஷியாக உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us