/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சர்வசக்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா துவக்கம்
/
சர்வசக்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா துவக்கம்
சர்வசக்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா துவக்கம்
சர்வசக்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா துவக்கம்
ADDED : நவ 12, 2024 06:40 AM
கடலுார்: கூத்தப்பாக்கம் சர்வ சக்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா நேற்று கால்கோல் விழாவுடன் துவங்கியது.
கடலுார், பாதிரிக்குப்பம் ஊராட்சி கூத்தபாக்கம் எல்.ஐ.சி., நகரில், சர்வ சக்தி விநாயகர் கோவில், பக்தர்களின் முயற்சியால் புதிதாக கட்டப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் டிச., 5ம் தேதி கும்பாபிேஷகம் நடக்கிறது. அதற்கான கால்கோல் விழா நேற்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, , சுமங்கலி பெண்கள் பந்தல்கால் நட்டு பூஜை செய்தனர்.
நிகழ்ச்சியில் கோவில் தர்மகர்த்தா ஜெயச்சந்திரன், ஊராட்சி தலைவர் சரவணன், சக்திவேல், கோவில் திருப்பணிக்குழு நிர்வாகிகள் மாயவேல், தாமோதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கும்பாபிேஷக விழா வரும் டிச., 4ம் தேதி காலை 10:30 மணிக்கு கணபதி பூஜையுடன் துவங்கி, அன்று மாலை முதற்கால யாக பூஜை நடக்கிறது. மறுநாள் காலை 2ம் கால யாக பூஜையை தொடர்ந்து காலை 11:00 மணிக்கு கடம் புறப்பாடாகி 11:25 மணிக்கு கோபுரத்திற்கும், 11:40 மணிக்கு மூலவருக்கும் கும்பாபிேஷகம் மற்றும் தீிபாராதனை நடக்கிறது. அன்று இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.