ADDED : டிச 16, 2024 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி; திட்டக்குடி அடுத்த பெருமுளை சோமசுந்தரேஸ்வர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி, நேற்று காலை 6:00 மணியளவில் கோ பூஜை நடந்தது. 6:30 மணியளவில் நால்வர் வீதியுலா நடந்தது.
காலை 7:00 மணிக்கு பன்னிரு திருமுறை, யாக பூஜை; 8:00 மணியளவில் மூலவருக்கு மகா தீபாராதனை; 8:45 மணியளவில் திருவாசகம் முற்றோதல் நடந்தது. சிவனடியார்கள், கிராம மக்கள் பங்கேற்றனர்.