/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குளம் முழுவதும் ஆகாயத்தாமரை நீரை பயன்படுத்த முடியாத அவலம்
/
குளம் முழுவதும் ஆகாயத்தாமரை நீரை பயன்படுத்த முடியாத அவலம்
குளம் முழுவதும் ஆகாயத்தாமரை நீரை பயன்படுத்த முடியாத அவலம்
குளம் முழுவதும் ஆகாயத்தாமரை நீரை பயன்படுத்த முடியாத அவலம்
ADDED : ஜன 10, 2025 11:28 PM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வெய்யலுாரில் உள்ள குளம் முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்து தண்ணீர் அசுத்தமாகியதால் அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்த முடியாமல் கிராம மக்கள் அவதியுடைந்து வருகின்றனர்.
சேத்தியாத்தோப்பு அடுத்த வெய்யலுார் மெயின்ரோடு அருகே பொதுக்குளத்தில் அங்குள்ள மக்கள் கால்நடைகளுக்கு தண்ணீரும, துணிவைத்தல், குளித்தல் ஆகியவற்றிற்கு பயன்படுத்தி வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆகாயத்தாமரை படர்ந்து தண்ணீர் அசுத்தமாகியுள்ளாதல் கால்நடைகள் தண்ணீர் குடிக்க மறுக்கின்றன.அங்குள்ள பெண்கள் குளத்தில் துணி துவைப்பது, குளிப்பது உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.
கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு மழைகாலங்களில் குளத்தில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் கோடை காலம் முடியும் வரை பயன்படுத்தி வந்தனர்.தற்போது குளம் முழுவதும் ஆகாயத்தாமரையால் துர்நாற்றம் வீசுவதால் குளத்தில் இறங்கவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
கீரப்பாளையம் ஒன்றியம் அதிகாரிகள் குளத்தை துார்வாரி, மீண்டும் ஆகாயத்தாமரை வளராமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.