/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீட்டில் புகுந்த பாம்பை பிடித்த தீயணைப்புதுறை
/
வீட்டில் புகுந்த பாம்பை பிடித்த தீயணைப்புதுறை
ADDED : நவ 16, 2024 02:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் வீட்டின் ஓடுகளில் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்.
நெல்லிக்குப்பம் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்.இவரது வீட்டின் தோட்டத்தில் உள்ள சிமென்ட் ஓடுகள் போட்ட கட்டடத்தில் பாம்பு ஒன்று புகுந்ததை கண்டு அச்சமடைந்து வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்தனர்.
தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து நிலைய அலுவலர் கவிதா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி 7 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்து காப்பு காட்டில் விட எடுத்து சென்றனர்.